Connect with us

GOAT படத்தின் முதல் பாடல் விசில் போடு எப்படி இருக்கு?

தமிழ் சினிமா

GOAT படத்தின் முதல் பாடல் விசில் போடு எப்படி இருக்கு?

GOAT படத்தின் முதல் பாடல் விசில் போடு

GOAT படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் தற்போது வெளியாகியுள்ள நிலையில், எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் பலர் தளபதியின் முதல் சிங்கிளிற்கு அனிருத்தான் சரியானவர் என கூறி வருகின்றனர்.

வெங்கட் பிரபுவுட் நடிகர் விஜய், முதன் முதலாக கைக்கோர்த்துள்ள படம், GOAT (The Greatest Of All Time).

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, விஜய்யுடன் இன்னும் பல நடிகர்கள் நடித்ததிருக்கின்றனர். சினேகா, லைலா உள்ளிட்ட நடிகைகள் பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் மீண்டும் சேர்ந்து நடிக்க உள்ளனர்.

அவர்கள் மட்டுமன்றி, தற்போது கோலிவுட்டில் வளர்ந்து வரும் கதாநாயகியாக இருக்கும் மீனாட்சி செளத்ரியும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

தமிழ் திரையுலகின் ஜாலி இயக்குநர் என்ற பெயரெடுத்த வெங்கட் பிரபு, ஏற்கனவே நடிகர் அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கினார்.

இதையடுத்து, விஜய்யை வைத்தும் அதே போன்ற ஒரு ஜாலியான திரைக்கதையுடன் படத்தை இயக்குகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய், GOAT படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டரிலேயே இவருக்கு 2 வேடங்கள் என்பது தெரிய வந்து விட்டது.

இதில், அவர் அப்பா-மகன் என இரு பாத்திரங்களில் நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது. நடிகர்கள் பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா உள்ளிட்டோர் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

நடிகர் விஜய்தான், GOAT படத்தில் வில்லனாகவும் ஹீராவாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர், நடிகர் கமல்ஹாசனும் ஹீரோ-வில்லன் என இரு பாத்திரங்களில் இந்தியன் படத்தில் நடித்திருக்கிறார்.

அஜித்தும் ஹீரோ – வில்லன் ரோலில் மங்காத்தாவில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இந்த லிஸ்டில் நடிகர் விஜய்யும் சேர இருக்கிறார்.

Continue Reading

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள செய்தி WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து கூகுள் செய்திகள் பக்கத்தில் Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழ் சினிமா

திரைவிமர்சனம்

பிரபலமானவை

To Top