Connect with us

அவர் இன்னும் குழந்தை தான் – பிரபல நடிகர் குறித்து குஷ்பு

பிரபலங்கள்

அவர் இன்னும் குழந்தை தான் – பிரபல நடிகர் குறித்து குஷ்பு

அவர் இன்னும் குழந்தை தான் என்று பிரபல இயக்குனரின் மகனை நடிகை குஷ்பு கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பி வாசு. அவரது மகன் சக்தி வாசு நடிகர் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் . 40 வயதான இவர் தற்போது தாடி மீசையுடன் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன் இருந்த பி வாசு போல காணப்படுகிறார்.

அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் ’நீங்கள் சிறு வயதில் பார்த்த ஒருவரை மீண்டும் நீண்ட காலம் கழித்து சந்திக்கும் போது அதே குழந்தையை பார்த்தது போலவே இருக்கும்.

அவர் இன்னும் குழந்தை தான்

அந்த வகையில் சக்தி வாசுவை நான் நீண்ட காலத்திற்கு பின் பார்க்கும் போது நம்பிக்கையோடு மகிழ்ச்சியோடும் பார்த்தேன். அவரை பார்த்ததும் தனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது. இன்னும் அவர் சிறு குழந்தை போகவே இருக்கிறார்’ என்று தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ரசிகர்கள் கமெண்ட்களில் பி வாசுவை போலவே அப்படியே இருக்கிறார் என்று பதிவு செய்து வருகின்றனர்.

பி வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு நடித்த ‘சின்னத்தம்பி’ படத்தில் சக்தி வாசு குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Continue Reading

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள செய்தி WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து கூகுள் செய்திகள் பக்கத்தில் Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திரைவிமர்சனம்

பிரபலமானவை

To Top