Connect with us

நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. காதல் கிசுகிசு தொடர்பில் மனம் திறந்த விஷால்

தமிழ் சினிமா

நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. காதல் கிசுகிசு தொடர்பில் மனம் திறந்த விஷால்

நடிகர் விஷால் நடிப்பில் ரத்னம் திரைப்படம் வருகிற 26ஆம் தேதி வெளியாகிறது. இதன்பின் துப்பறிவாளன் 2 படத்தை அவரே இயக்கி நடிக்கவுள்ளார்.

அத்துடன், 2026 தேர்தலில் களமிறங்குவேன் என கூறியிருக்கின்ந நடிகர் விஷாலும் 40 வயது ஆகிவிட்டது. ஆனாலும் கூட இதுவரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனிஷா ரெட்டி என்பவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அது திருமணம் வரை போகவில்லை.

இதேவேளை, தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வரலக்ஷ்மி சரத்குமார். இவருக்கு சமீபத்தில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஷாலும், நடிகை வரலக்ஷ்மியும் காதலித்து வந்ததாகவும், ஆனால் இந்த காதல் கைகூடவில்லை என்றும் கிசுகிசுக்கப்பட்டது. அது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை.

இந்த நிலையில், வரலக்ஷ்மி பற்றிய கேள்விக்கு பதிலளித்த நடிகர் விஷால்” வரலக்ஷ்மியை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியாகிறேன். அவர் தெலுங்கில் நல்ல மார்க்கெட்டை அமைத்திருக்கிறார்.

திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கதாபாத்திரத்திற்கு பிறகு ஹனுமான் படத்தில் வரலக்ஷ்மியின் கேரக்டர் என்னை மெய் சிலிர்க்க வைத்தது.

அதில் அவர் சிறப்பாக நடித்திருந்தார். உண்மையில் அவரை நினைந்து நான் மகிழ்ச்சியாகிறேன். அவருடைய கேரியரை தாண்டி அடுத்த கட்டத்திற்கு அவரின் வாழ்க்கையை நகர்த்த ஆரம்பித்து இருக்கிறார்” என பேசினார் விஷால்.

Continue Reading

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள செய்தி WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து கூகுள் செய்திகள் பக்கத்தில் Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழ் சினிமா

திரைவிமர்சனம்

பிரபலமானவை

To Top