Connect with us

எங்க பிரச்சனையே இங்க மட்டும் தான்.. சரி செஞ்சே ஆகணும்.. ருத்துராஜ்

கிரிக்கெட்

எங்க பிரச்சனையே இங்க மட்டும் தான்.. சரி செஞ்சே ஆகணும்.. ருத்துராஜ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக ருத்துராஜ் தலைமை தாங்கி வந்தாலும் சில குழப்பங்கள் காரணமாக தோல்வியை தழுவும் நிலையும் அவர்களுக்கு உருவாகியுள்ளது.

சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் ராஜாவாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ், எதிரணியின் சொந்த மைதானங்களில் தடுமாற்றம் காண்கிறது.

நடப்புத் தொடரில் ஆடிய மூன்று போட்டிகளிலும் சேப்பாக்கத்தில் வென்ற எஸ் சிஎஸ்கே, மும்பை அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் வெற்றி கண்டது. மொத்தமுள்ள 7 போட்டிகளில் இந்த நான்கு வெற்றிகள் அமைய, மற்ற மூன்று தோல்விகளும் எதிரணியின் மைதானத்தில் நிகழ்ந்தது தான்.

இனிவரும் மூன்று போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருந்தாலும் அணிகளில் உள்ள தவறுகளை திருத்திக் கொண்டு எதிரணியின் சொந்த மைதானத்திலும் ஆதிக்கம் செலுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் தான் இந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற ஒரு இக்கட்டான நிலையும் சிஎஸ்கேவுக்கு உள்ளது.

சமீபத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆடி இருந்த சிஎஸ்கே, விக்கெட்டுகளை இழந்து ரன் சேர்க்கவும் சிரமப்பட்டது. இதன் பின்னர் ஜடேஜா, ரஹானே, தோனி மற்றும் மொயீன் அலி ஆகியோரின் உதவியால் 176 ரன்கள் எடுத்திருந்தது.

பின் இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணியில் ராகுல் மற்றும் டி காக் முதல் விக்கெட்டிற்கு 134 ரன்கள் சேர்த்ததால் அவர்களின் வெற்றியும் எளிதாகவே இருந்தது.

19 ஓவர்களின் முடிவில் இலக்கை எட்டி வெற்றி பெற்றிருந்த லக்னோ அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

இந்த தோல்விக்கு பின்னர் பேசியிருந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்துராஜ், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக தான் முடித்திருந்தோம். அப்படி ஒரு சூழலில் இருந்து 176 ரன்கள் குவித்ததே பெரிது. பவர் பிளேவில் விழத் தொடங்கிய விக்கெட், சிறிய இடைவெளியில் தொடர்ந்து கொண்டே இருந்தது.

நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக இருந்ததாக நினைக்கிறோம். ஆரம்பத்தில் மோசமாக இருக்கும் பிட்ச், பின்னர் டியூ வருவதன் காரணமாக சிறப்படைவதால் 190 தான் இந்த மைதானத்தில் நல்ல ஸ்கோர் என்று நினைக்கிறேன்.

நாங்கள் பவர் பிளேவில் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்ற இடத்தில் தான் அதிக முன்னேற்றம் காண வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

அதுதான் எதிரணி வீரர்களுக்கு நெருக்கடியை உண்டு பண்ணும். அதில் தான் இனிமேல் கடினமாக உழைக்க வேண்டி உள்ளது. இன்னும் சிறப்பாக தயாராகி சொந்த மைதானத்தில் இனி ஆடவுள்ள மூன்று போட்டிகளில் கவனம் செலுத்துவோம்” என ருத்துராஜ் கூறினார்.

Continue Reading

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள செய்தி WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து கூகுள் செய்திகள் பக்கத்தில் Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திரைவிமர்சனம்

பிரபலமானவை

To Top