- Advertisement -

ஆண்ட்ரியாவின் கா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

இயக்குனர் நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள திரைப்படம் ‘கா’. இந்த படத்தில் ஆண்ட்ரியா காட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராக ஆக்சன் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

the-release-date-of-andrea-starrer-ka-has-been-announced

- Advertisement -

இந்த படத்தில் சலீம் கவுஸ், மாரிமுத்து, கமலேஷ், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தர் சி. பாபு இசையமைத்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு ‘கா’ படத்தின் டிரைலர் வெளியானது. இந்த நிலையில், ‘கா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‘கா’ திரைப்படம் வருகிற மார்ச் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -