Connect with us

தமிழ் சினிமா

தனுஷின் கன்னத்தில் ஓங்கி அறைவிட்ட பிரபலம்… படப்பிடிப்பில் பரபரப்பு

தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் தனுஷ். துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார்.

ஆரம்பத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்த தனுஷ், இன்று நடிப்பு அசுரனாக உயர்ந்து இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவரது அண்ணன் செல்வராகவன் தான்.

தனுஷை சிறந்த நடிகராக்கிய பெருமை செல்வராகவனுக்கு உண்டு. இதனை தனுஷே பல்வேறு மேடைகளில் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

அந்த அளவுக்கு இவர்களது காம்போவுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு இருக்கிறது. விரைவில் இந்த காம்போவிடம் இருந்து ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 ஆகிய திரைப்படங்கள் தயாரக இருக்கின்றன.

இப்படி ரசிகர்களின் பேவரைட் கூட்டணியாக இருந்து வரும் இவர்கள் இருவருக்கும் இடையே ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற மோதல் சம்பவம் ஒன்று தற்போது தெரியவந்துள்ளது.

அந்த வகையில் தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் காதல் கொண்டேன். இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் தனுஷை செல்வராகவன் ஓங்கி கன்னத்திலேயே அறைந்திருக்கிறார்.

காதல் கொண்டேன் படத்தில் சோனியா அகர்வாலுக்கு ஜோடியாக நடித்திருப்பார் தனுஷ். அதில் ஜீனியஸ் வினோத் என்கிற ஏழை மாணவன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் தனுஷ்.

அப்போது நடிகை சோனியா அகர்வால் வீட்டுக்கு அவர் முதன்முறையாக செல்லும்போது, அந்த பிரம்மாண்ட வீட்டை பார்த்து பிரம்மித்துப் போகும்படியான காட்சி இடம்பெற்று இருக்கும். இந்த காட்சிக்காக தான் செல்வராகவனிடம் அறைவாங்கி இருக்கிறார் தனுஷ்.

சோனியா அகர்வாலின் வீட்டை பார்த்ததும் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என சொல்லி கொடுத்திருக்கிறார் செல்வராகவன். ஆனால் தனுஷ், அவர் எதிர்பார்த்த அளவுக்கு அந்த காட்சியில் நடிக்கவில்லையாம்.

இந்த காட்சிக்காக அதிகளவில் ரீ-டேக்கும் வாங்கி இருக்கிறார். இதனால் டென்ஷன் ஆன செல்வராகவன் கோபத்தில் தனுஷின் கன்னத்தில் ஓங்கி அறைவிட்டு இருக்கிறார். படக்குழுவினர் முன்னிலையில் அடிவாங்கிய அவமானத்தில் தனுஷ் கதறி அழுதிருக்கிறார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி இருக்கிறார்கள். அதன்பின்னரே அந்த காட்சியில் நடித்திருக்கிறார் தனுஷ்.

அண்ணனிடம் அறைவாங்கிய பின் அவர் நடித்த அந்த காட்சி இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. காதல் கொண்டேன் படப்பிடிப்பின் போது நடந்த இந்த சம்பவம் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

NEWS21
Cineavai இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Cineavai Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top