Homeதமிழ் சினிமா9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நேரடியாக மோதும் தல & தளபதி

9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நேரடியாக மோதும் தல & தளபதி

தல – தளபதி மீண்டும் மோதல் – Varisu vs Thunivu

விஜய் நடித்த வாரிசு படமும் அஜித் நடித்த துணிவு படமும் ஒரே சமயத்தில் வெளியாவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி வாரிசு

பீஸ்ட் படத்துக்குப் பிறகு தெலுங்கு இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் வாரிசு என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தானாதான் கதாநாயகி.

இந்தப்படம் தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்படும் எனச் சமீபத்தில் விஜய் பேட்டியளித்திருந்தார்.

இது விஜய் நடிக்கும் 66-வது படமான வாரிசு, 2023 பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஹீரோ ஆதிக்கத்தை உடைத்த ‘அவள் ஒரு தொடர்கதை’

தல துணிவு

அதேநேரம், ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் – துணிவு. இசை – ஜிப்ரான். மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். வீரா, அஜய், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் போன்றோரும் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், துணிவு படமும் பொங்கல் பண்டிகையின் போது வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தைத் தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

ஜில்லா –  வீரம்

முன்னதாக, 2014 பொங்கல் பண்டிகையின்போது விஜய் நடித்த ஜில்லாவும் அஜித் நடித்த வீரமும் ஒரே சமயத்தில் வெளியாகின. அதற்குப் பிறகு 9 வருடங்கள் கழித்து இப்போதுதான் இருவருடைய படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளன.

Also Read: விராட் கோலியுடன் ஒரே ஒரு திட்டம்.. மனந்திறந்தார் சூர்யகுமார்

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை