Homeதமிழ் சினிமாஇலங்கை செல்லும் தளபதி விஜய்... 'கோட்' சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா?

இலங்கை செல்லும் தளபதி விஜய்… ‘கோட்’ சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், உருவாகி வரும் ‘கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்ததுடன், அடுத்த கட்டமாக இலங்கையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படப்பிடிப்பில் விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து, இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூன்று பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் அதில் ஒரு பாடல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதத்தில் படித்துவிட்டு ஜூன் மாதம் விஜய்யின் பிறந்த நாளன்று இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை