- Advertisement -

குக் வித் கோமாளிக்கு வரமாட்டேன் – சிவாங்கி அதிரடி!

Cinema Editor
By Cinema Editor
2 Min Read
- Advertisement -

குக் வித் கோமாளி மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் கலக்கி வருபவர் சிவாங்கி. சமீபத்தில் வடிவேலு நடிப்பில் வெளியான ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திலும் நடித்து இருந்தார்.

இவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றத்தில் இருந்தே இவருக்கு ரசிகர்கள் ஏராளமக உருவாகினர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்துள்ளன நிலையில் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்றே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளன.

- Advertisement -

இதுவரை கோமாளியாக மக்களை மகிழ்வித்த சிவாங்கி. தற்போது ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நான்காவது சீசனில் குக்காக களமிறங்கியுள்ளார். இவர் செய்து கொடுக்கும் உணவுப் பொருட்கள் பல பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் எலிமினேஷன் ரவுண்டில் விஜே விஷால் மற்றும் சிவாங்கி போட்டி போட்டனர். இதில் விஜே விஷால் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இரண்டு முறை ‘செப் ஆஃப் தி வீக்’ வாங்கிய விஜே விஷால் எலிமினேட் ஆகியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

- Advertisement -

குக் வித் கோமாளிக்கு வரமாட்டேன் - சிவாங்கி அதிரடி!

மேலும் சிவாங்கியை வேண்டுமென்றே விஜய் தொலைக்காட்சி காப்பாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சர்ச்சைக்கு சிவாங்கி உங்களை மகிழ்விக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். இந்த ஷோவை உள்ள படியே பார்த்து மகிழுங்கள். ஒருவரை குறைவாக மதிப்பிடுவது ஈஸி என பதில் அளித்து இருந்தார்.

- Advertisement -

நேரம் கிடைக்கும் போது எல்லாம் இவர் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக உரையாடிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது ரசிகர் ஒருவர் நீங்கள் அடுத்த முறை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மீண்டும் கோமாளியாக கலந்து கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சிவாங்கி, “இனிமேல் நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரமாட்டேன்” என்றும் பதிலளித்திருந்தார்.

ஒரு சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அடுத்த சீசனில் கலந்து கொள்ள முடியாது என்பதால் அவர் இவ்வாறு தெரிவித்திருப்பார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -