- Advertisement -

வில்லியையே மிரட்டிய பெண்கள்… சீரியல் நடிகை சுபத்ராவிற்கு நேர்ந்த சம்பவம்!

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

சின்னத்திரையில் பிரபல நடிகை சுபத்ரா தற்போது வில்லி கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

ஒரு சீரியலில் வில்லியாக நடிக்கும் நடிகை பொது இடங்களுக்கு செல்லவே முடியாது. அவர் நிஜ வாழ்க்கையில் வில்லத்தனம் செய்வது போல பார்ப்பவர்கள் வந்து திட்டிவிட்டு செல்வார்கள்.

- Advertisement -

அப்படி ஒரு சம்பவம் தான் நடிகை சுபத்ராவிற்கு நடந்துள்ளது. இவர் தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: அசிங்கப்படுத்திய இளம் ஹீரோ…சினிமாவை விட்டே விலக முடிவெடுத்த பானுப்பிரியா.. ரசிகர்கள் அதிர்ச்சி!

- Advertisement -

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுபத்ரா கூறியதாவது, “நான் 7சி என்ற சீரியலில் நடிகர் ஸ்டாலின் மனைவி கேரக்டரில் ஹீரோயினாக நடித்து கொண்டிருந்த சமயத்தில் ஒருமுறை காய்கறி வாங்க கடைக்கு சென்றிருந்தேன்.

அங்கு என்னை பார்த்தவர்கள் நீ ஸ்டாலின் பொண்டாட்டி தான? உனக்கெல்லாம் வாழவே தெரியாதா? பார்த்து அனுசரிச்சு போகத் தெரியாதா. ஒழுங்கா வாழுற வழிய பாரு என மிரட்டி விட்டு சென்றார்கள்.

- Advertisement -

அப்போதுதான் நான் யோசித்தேன் என்னடா இது ஒரு சீரியலுக்கு இந்த அளவிற்கு அடிமையாகவா இருப்பீர்கள் என்று நினைத்தேன்” என கூறியுள்ளார்.

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -