குக் வித் கோமாளியில் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்த மணிமேகலை

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கடந்த சில மாதங்களுக்கு முன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய மணிமேகலை தற்போது மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

வழக்கம்போல் 10 குக்குகளுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

டாப் 5 இடத்தை பிடிக்க போட்டியாளர்கள் கடுமையாக போட்டி போட்டு வரும் நிலையில், கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் வெற்றிபெற்று முதல் ஆளாக டாப் 5-க்குள் நுழைந்தார் சிவாங்கி.

குக் வித் கோமாளியில் ரசிகர்களின் மனம்கவர்ந்த கோமாளியாக வலம் வந்தவர் மணிமேகலை. கடந்த மூன்று சீசன்களாக கலக்கி வந்த மணிமேகலை, இந்த சீசனிலும் முதல் சில வாரங்கள் கோமாளியாக கலந்துகொண்டார்.

குக் வித் கோமாளியில் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்த மணிமேகலை

ஆனால் திடீரென இடையே இந்நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார் மணிமேகலை. அவர் எதற்காக விலகினார் என்பது புரியாத புதிராகவே இருந்தது.

விலகியதற்கான காரணத்தை அவர் தெரிவிக்காததால், அவர் கர்ப்பமாக இருப்பதனால் விலகினார் என்றும், அவருக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் விலகினார் என்றும் பலவிதமான செய்திகள் உலா வரத் தொடங்கின.

இந்நிலையில், தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிக்கு திடீரென ரீ-எண்ட்ரி கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார் மணிமேகலை.

மணிமேகலை இந்த வாரம் கோமாளியாக அல்லாமல் தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார் என்பது தெரிகிறது. இந்த எபிசோடு ஒளிபரப்பாகும்போதாவது தான் திடீரென விலகியதற்கான காரணத்தை மணிமேகலை வெளியிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here