Homeதமிழ் சினிமாசின்னத்திரைதந்தையால் தாய்க்கு நடந்த கொடூரம்… நாஞ்சில் விஜயன் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

தந்தையால் தாய்க்கு நடந்த கொடூரம்… நாஞ்சில் விஜயன் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நாஞ்சில் விஜயன். இவர் பெரும்பாலும் இந்த நிகழ்ச்சிகளில் பெண் வேடமணிந்து காமெடி செய்வார்.

இவரின் காமெடி பலரும் ரசிக்கும் விதமாக இருக்கும். பல நேரங்களில் இவரின் உருவத்தை கேலி செய்யும் விதமாக சில காமெடி வசனங்கள் இருக்கும்.

ஆனால் நாஞ்சில் விஜயன் அதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் காமெடியாக மட்டுமே எடுத்து கொள்வார். பொதுவாகவே பிறரை சிரிக்க வைத்து சிரித்து நபர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய சோகம் இருக்கும் என்று கூறுவார்கள்.

அப்படி ஒரு சோகம் தான் நாஞ்சில் விஜயனின் வாழ்க்கையிலும் உள்ளது. அவரே அதை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நாஞ்சில் விஜயன்

அதன்படி நாஞ்சில் விஜயனின் தந்தை பெரிய குடிகாரராம். அவரின் அம்மா தான் வேலை பார்த்து நாஞ்சில் விஜயன் உட்பட இரண்டு குழந்தைகளை வளர்த்துள்ளார்.

ஒருகட்டத்தில் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் நாஞ்சில் விஜயனின் அம்மா தீக்குளித்து விட்டாராம். தனது கண்முன்னே தாய்க்கு நடந்த கொடுமை நாஞ்சில் விஜயனை பெரியளவில் பாதித்துள்ளது.

தனது தாய் துடித்து சாகும்போது ஒரு வாய் தண்ணீர் கூட கொடுக்க முடியவில்லை என மிகவும் வேதனையுடன் நாஞ்சில் விஜயன் கூறியுள்ளார்.

இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் பிறரை சிரித்து மகிழ்விக்கும் நாஞ்சில் விஜயன் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா என வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை