பிக்பாஸ் தமிழ் முதல் நாள் அப்டேட் – ஆட்டம் போடும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் தமிழ் முதல் நாள் அப்டேட் / Bigg Boss Tamil 6 Daily Updates: பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் நேற்று தொடங்கியது. அறிமுக நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களின் அறிமுகம் பிரமாண்டமாக நடைபெற்றது.

வழமைபோல உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று 6வது சீசனையும் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியை பிரமாதமாக தனக்கே உரிய பாணியில் ஆரம்பித்து வைத்தார்.

- Advertisement -

பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள்

ஜி.பி. முத்து
அசல் கொலார்
ஷிவின் கணேசன்
அஸீம்
ராபர்ட் மாஸ்டர்
ஆயிஷா
ஷெரினா
மணிகண்டன்
ராஜேஷ்
ரச்சிதா மகாலெட்சுமி
ராம் ராமசாமி
ஏடிகே
ஜனனி
சாந்தி விக்ரமன்
அமுதவாணன்
மகேஷ்வரி சாணக்யன்
விஜே கதிரவன்
குயின்சி
நிவ்வா
தனலெட்சுமி

பிக்பாஸ் தமிழ் முதல் நாள் அப்டேட்

- Advertisement -

 

ஒவ்வொரு நாளும் காலை போட்டியாளர்களை விழிப்பதற்காக பாடல் ஒன்று ஒலிக்கப்படும் நிலையில் இன்றைய முதல் நாளில் ’எங்க ஏரியா உள்ள வராதே’ என்ற பாடலை பிக்பாஸ் ஒலிக்க வைத்தார்.

- Advertisement -

இந்தநிலையில் அனைத்து போட்டியாளர்களும் வெளியே வந்து ஆட்டம் போடும் காட்சிகள் புரமோவில் உள்ளன.

முதல் நாளில் ஒருவருக்கு ஒருவர் கைகோர்த்து கொண்டு ஒற்றுமையாக ஆட்டம் போடும் இந்த போட்டியாளர்கள் அடுத்தடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

திருமணமான 4 மாதத்தில் இரட்டை குழந்தைகளா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிக்பாஸ் தமிழ் சீசன் 06 – Bigg Boss Tamil Season 6

பிக்பாஸ் தமிழ் சீசன் 06 - Bigg Boss Tamil Season 6

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்ற வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிநதுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் திரைத்துரை மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலங்களாக உள்ளவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

தங்களுக்குள் அறிமுகம் இல்லாத போட்டியாளர்கள் எவ்வித வெளியுலக தொடர்பும் இல்லாமல் ஒரு வீட்டில் 100 நாட்கள் தங்கும்போது அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களே பிக்பாஸ் நிகழ்ச்சி. இடையில் பிக்பாஸ் சொல்லும் அனைத்து டாஸ்க்குகளை முடிக்க வேண்டும்.

மேலும் இதில் ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை பொருத்து வாரா வாரம் ஒருவர் வீ்ட்டில் இருந்து வெளியேற்றப்படுவார். விஜய் டிவியில் இரவு நேரங்களில் பிக்பாஸ் வீ்ட்டில் நடந்த ஹைலைட்ஸ் ஒளிபரப்பாகும். ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும்.

இந்நிகழ்ச்சி தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் பார்த்து ரசிக்கலாம் என்று பிக்பாஸ் ப்ரமோவில் கூறப்பட்டுள்ளது.