Search
Close this search box.

அசோக் செல்வனின் ‘சபா நாயகன்’ படத்தின் டீசர் வெளியானது

‘சூதுகவ்வும்’ படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு ‘ஓ மை கடவுளே’ திருப்புமுனை படமாக அமைந்தது.

தொடர்ந்து இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் ‘சபா நாயகன்’.

- Advertisement -

மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Also Read – ‘மார்க் ஆண்டனி’ படத்தின் டீசர் தேதி அறிவிப்பு

- Advertisement -

லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், ‘சபா நாயகன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Teaser of Ashok Selvan’s Saba Nayagan

 

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.