Homeதமிழ் சினிமாமுன்கூட்டியே திரைக்கு வரும் சிவகார்த்திகேயனின் "மாவீரன்" வெளியான அறிவிப்பு

முன்கூட்டியே திரைக்கு வரும் சிவகார்த்திகேயனின் “மாவீரன்” வெளியான அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது.

இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சரிதா, சுனில், இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை வெளியானது. அதன்படி, மாவீரன் படம் ஜூலை 14-ம் தேதி வெளியாகும் என புதிய தகவலை படக்குழு வெளியிட்டு உள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை