தமிழ் சினிமா
இந்திய அணிக்கு கேப்டனாகும் ஷிகர் தவான்; வெளியான தகவல்!
19ஆவது ஆசிய விளையாட்டு தொடர் சீனாவின் அங்கு என்ற நகரத்தில் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி அக்டோபர் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடரில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் இடம் பெற்றுள்ளது. கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்கும் முயற்சியில் ஐசிசி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா பிறகு ஐ சி சி முடிவுக்கு ஒப்புக் கொண்டுள்ளது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற வேண்டும் என்றால் அதற்கு சோதனை முயற்சியாக முதலில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் இடம் பெற வேண்டும் எதற்காக ஐசிசி எடுத்த முயற்சிக்கு இந்தியா ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்திய அணி 2014 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்கவில்லை. ஆனால் இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
அதன்படி இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் தலைமையிலான அணி சீனா செல்ல உள்ளது. உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி தயாராகும் நிலையில் இரண்டாம் பட்ச வீரர்களை இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்ப பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
இதன்படி ஐபிஎல் தொடரில் கலக்கிய சாய் சுதர்சன், திலக் வர்மா, ரிங்கு சிங் போன்றோர் இந்த தொடரில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. இந்த அணியை வழிநடத்த ஒரு அனுபவ வீரர் வேண்டும் என்பதால் ஷிகர் தவானுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தவான் தற்போது இந்திய மெயின் அணியில் இடம்பெறுவதில்லை. எனினும் அவர் நல்ல பார்மில் இருப்பதால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தவானை அனுப்ப முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொடருக்கு பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மணனை அனுப்பவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக ஜூலை 7ஆம் தேதி அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தங்களது கிரிக்கெட் அணியை அனுப்பினால் அது கிரிக்கெட்டுக்கு மேலும் பலத்தை சேர்க்கும்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.


