- Advertisement -

5 வயது குழந்தையோடு வீதியில் நின்ற சீரியல் நடிகை… தீபா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தீபா. இவருக்கு கடந்த ஆண்டு சாய் கணேஷ் பாபு என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது.

முதல் கணவரை பிரிந்த தீபா 15 வயதில் மகன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்த சம்பவம் அந்த சமயத்தில் பெரிய பேசுபொருளாக அமைந்தது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது தீபா அவரின் கடந்த கால வாழ்க்கை குறித்து கண்ணீர் மல்க பேசியுள்ளார். “எனக்கு 17 வயதில் திருமணம் நடந்தது. அடுத்த வருடமே குழந்தையும் பிறந்து விட்டது.

5 வயது குழந்தையோடு வீதியில் நின்ற சீரியல் நடிகை

- Advertisement -

ஆனால் என் திருமண வாழ்க்கை நான் நினைத்தபடி இல்லை. என் 23 வயதிலேயே திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது. அப்போது என் மகனுக்கு 5 வயதுதான். அவனை அழைத்து கொண்டு எங்கே போவது என தெரியாமல் நடுத்தெருவில் நின்றேன்.

அந்த நேரத்தில் எனக்கு தைரியம் கொடுத்ததே என் பையன் தான். நான் இரண்டாம் திருமணம் செய்தபோது இவ்வளவு பெரிய மகன் இருக்கும்போது திருமணம் தேவையா என்று பலரும் கேட்டார்கள்.

- Advertisement -

என் அப்பா தான் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென ஆசைப்பட்டார். அவருக்காக தான் திருமணம் செய்தேன். ஆனால் அதையும் ஏன் செய்தோம் என பலமுறை யோசித்திருக்கிறேன்.

என் மகன் தான் எல்லாம். அவனுக்காக இன்னும் ஓடிக்கொண்டே இருப்பேன். அவனை நன்றாக படிக்க வைத்தால் போதும்” என மிகவும் உருக்கமாக பேசியிருந்தார்.

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -