Homeதமிழ் சினிமாசமந்தாவின் முன்னாள் கணவருடன் பிரபல நடிகை காதலா?

சமந்தாவின் முன்னாள் கணவருடன் பிரபல நடிகை காதலா?

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த சோபிதா துலிபாலாவுக்கும், சமந்தாவின் முன்னாள் கணவரும், தெலுங்கு நடிகருமான நாகசைதன்யாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன.

லண்டன் ஓட்டல் ஒன்றில் இருவரும் சாப்பிடும் புகைப்படமும் வலைத்தளத்தில் கசிந்தது. இதன் மூலம் இருவரும் காதலிப்பது உறுதியாகி இருப்பதாக பலரும் பேசினர். இதற்கு சோபிதா துலிபாலா விளக்கம் அளித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “என்னை பற்றி காதல் வதந்திகள் பரவி உள்ளது. யாரோ ஏதோ சொல்கிறார் என்று அதையெல்லாம் கண்டு கொள்வதும், அதற்காக வருத்தப்படுவதும் பிரயோஜனம் இல்லை.

அந்த வதந்திக்கும், எனக்கும் சம்பந்தமே இல்லாதபோது அவசரமாக பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

அதேபோல எந்த தவறும் செய்யாதபோது பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. என் வேலையை நான் செய்து கொண்டு போகிறேன் அவ்வளவுதான். பொன்னியின் செல்வன் வெற்றி படத்தில் நடித்த மகிழ்ச்சியான நினைவோடு இருக்கிறேன்” என்றார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை