- Advertisement -

தங்கத்துக்கு பதில் வைரத்தில் தாலி அணிந்த ரகுல் ப்ரீத் சிங்…

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் பாலிவுட் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானி ஆகியோரின் திருமணம் கோவாவில் கடந்த 21 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

பலரும் பார்த்து வியந்து போகும் அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானி திருமண ஆடைகளை பார்த்து பார்த்து தேர்வு செய்திருந்தார்கள்.

- Advertisement -

பல பாலிவுட் பிரபலங்கள் இவர்களின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மணமக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார்.

- Advertisement -

இவர்களின் கலர்ஃபுல்லான திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் படு வைரலாக பரவி வருகின்றன. இந்நிலையில் மற்றொரு விஷயமும் வைரலாகி வருகிறது. அது வேறொன்றும் இல்லை ரகுல் ப்ரீத் சிங்கின் தாலி தான்.

பொதுவாக அனைவரும் தங்கத்தில் தான் தாலி அணிவார்கள். ஆனால் அதிலும் வித்தியாசம் காட்ட நினைத்த ரகுல் ப்ரீத் சிங் வைரத்தில் தாலி அணிந்துள்ளாராம். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -