டாடா படத்துக்கு குவியும் பாராட்டு… நெகிழ்ந்த ராகவா லாரன்ஸ்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அறிமுக இயக்குநர் கணேஷ்.கே.பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டாடா’.

விடிவிகணேஷ், பாக்யராஜ், ஐஸ்வர்யா, ஹரீஸ்.கே உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை ரெட்ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டிருந்தது.

அப்பா – மகன் பாசத்துடன் எமோஷனலாக உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தைப் பார்த்து நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “டாடா படத்தைப்பார்த்து நெகிழ்ந்து போனேன். திரையரங்குகளில் அனைவரும் சென்று பார்க்கக்கூடிய சிறந்த குடும்ப திரைப்படம். படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here