அகநக பாடலின் வீடியோ வெளியானது… ரசிகர்கள் உற்சாகம்!

1 Min Read

கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண் மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.

- Advertisement -

நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடித்துள்ளனர்.

சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடித்துள்ளனர்.

- Advertisement -

அகநக பாடலின் வீடியோ

பாண்டிய ஆபத்துதவிகள் பாத்திரத்தில், ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

- Advertisement -

இப்படத்தின் முதல் பாகம் அதிக வசூலையும் பாராட்டையும் பெற்ற நிலையில், கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2-ஆம் வசூலில் அந்த அளவில் ஆளவில்லை.

இந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் அகநக பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Share This Article
Follow:
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
Leave a comment