- Advertisement -

தியேட்டரில் மட்டுமல்ல, டிஜிட்டலிலும் மீண்டும் ரிலீஸ் ஆகும் பையா

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

14 வருடங்களுக்கு முன்பு கடந்த 2010ல் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘பையா’ திரைப்படம் புதிய டெக்னாலஜி அடிப்படையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு, வரும் ஏப்ரல்-11ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான முன்னோட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன் கமலா திரையரங்கில் ஒரு காட்சி திரையிடப்பட்டது.

- Advertisement -

‘பருத்திவீரன்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அந்த படத்தில் முரட்டுத்தனமான கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருந்த கார்த்தியை அதற்கு முற்றிலும் மாறாக ஒரு நகரத்து பையனாக ‘பையா’ படம் மூலம் உருமாற்றினார் இயக்குநர் என்.லிங்குசாமி.

இதில் நடித்த கார்த்தி, தமன்னா ஜோடி ரசிகர்களின் மிகப்பெரிய அன்பை பெற்றது. மேலும் என்.லிங்குசாமியின் பரபரக்க வைக்கும் திரைக்கதையும் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளியாகி ரசிகர்களின் தேசிய கீதமாகவே மாறிப்போன பாடல்களும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய தூண்களாக அமைந்தன.

- Advertisement -
TAGGED:
Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -