Homeதமிழ் சினிமாதளபதி நடிகையை பறித்த அஜித்.. நயன்தாரா மார்க்கெட் அவ்வளவுதானா?

தளபதி நடிகையை பறித்த அஜித்.. நயன்தாரா மார்க்கெட் அவ்வளவுதானா?

திரிஷா – நயன்தாரா

அஜித்தின் துணிவு படம் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தளபதி விஜய் பட நடிகையை இந்த படத்தில் கமிட் செய்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

விஜயின் கில்லி, குருவி, திருப்பாச்சி, ஆதி போன்ற படங்களில் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை திரிஷா. இப்போது ஏகே 62 படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க உள்ளாராம்.

அஜித்துடன் இவர் ஏற்கனவே கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் வெளியான பிறகு த்ரிஷா மார்க்கெட் உச்சத்தை தொட்டது.

ஒரு காலகட்டத்தில் திரிஷாவின் மார்க்கெட்டை இறக்கி நயன்தாரா நம்பர் ஒன் இடத்திற்கு வந்தவர் நயன்தாரா. இப்போது ஏகே 62 படத்தில் திரிஷா நடித்த உள்ளதால் விக்னேஷ் சிவனால் நயன்தாராவின் மார்க்கெட் சரிய வாய்ப்புள்ளது.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை