Homeதமிழ் சினிமா2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த நடிகர் ஆர்யா பட டிரைலர்

2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த நடிகர் ஆர்யா பட டிரைலர்

நடிகர் ஆர்யா நடித்துள்ள ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ பட டிரைலர் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இந்த படத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார்.

ராமநாதபுரம் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை