- Advertisement -

சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்கு சிக்கல்.. தடை செய்ய கோரி போராட்டம்!

Cinema Editor
By Cinema Editor
2 Min Read
- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிப்பில் கமலஹாசன் தயாரித்துள்ள அமரன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி தற்போது அமரன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

- Advertisement -

சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள அந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இதற்கு மறைந்த மேஜர் முகுந்த் வாழ்க்கையை தழுவிக் கதை எழுதியுள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் 1 நிமிடம் 35 நொடிகள் ஓடக்கூடிய கிளிம்ஸ் (Glimpse) காட்சியை வெளியிட்டனர்.

- Advertisement -

இந்த கிளிம்ஸ் காட்சியின் தொடக்கத்தில் இந்திய ராணுவ வீரரை பிடித்த இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவர், இஸ்லாம் சிறுவர்களிடம் நீங்கள் வருங்கால சுதந்திர போராளிகள், நமக்கு என்ன வேணும் என்று அவர்களிடம் கேட்க சுதந்திரம் வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இதற்கு தற்போது தமிழகத்தில் உள்ள இஸ்லாம் அமைப்புகளும் காட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இதில் வரும் வசனம் மற்றும் காட்சி இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் உள்ளதாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றுள்ளது.

மேலும் கமல்ஹாசன் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். அத்துடன் கமல்ஹாசனின் புகைப்படங்களை எரித்தும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகளும் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தின.

அதன் காரணமாக தமிழக அரசு அந்த படத்தை தடைச் செய்து அளவிற்கு சென்றது. அதற்குப் பிறகு, பேச்சுவார்த்தையின் மூலம் விஸ்வரூபம் படம் வெளியானது. இந்த நிலையில் தற்போது கமலஹாசன் தயாரித்துள்ள அமரன் திரைப்படத்திற்கும் இஸ்லாம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளன.

இந்த திரைப்படத்தில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் சாதனைகள் மற்றும் அவர் சந்தித்த சவால்கள் உள்ளிட்டவற்றை படமாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படம் இன்னும் வெளியாகவில்லை. அத்துடன் டீசர், ட்ரெய்லர் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் ஒரு நிமிடம் 35 நொடிகள் ஓடக்கூடிய இந்த கிளிம்ஸ் காட்சியை மட்டும் பார்த்துவிட்டு கருத்து சொல்வது, எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. முழுப்படத்தையும் பார்த்தப்பிறகே அதில் என்ன சொல்லபடுகிறது என்பது தெரியவரும்.

அதுமட்டுமில்லாமல் இது போன்ற எதிர்ப்புகள் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவை என்று படைப்பாளிகளும், விமர்சகர்களும் கூறுகின்றனர். அமரன் திரைப்படத்திற்கு இன்னும் வெளியீட்டு தேதியே அறிவிக்காத நிலையில் தற்போது எதிர்ப்பு கிளம்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -