Homeதமிழ் சினிமாமைக்கேல் திரைவிமர்சனம்

மைக்கேல் திரைவிமர்சனம்

தந்தையை தேடி 13 வயதில் மும்பைக்கு செல்கிறார் கதாநாயகன் மைக்கேல். ஒருவழியாக தந்தையை தேடி கண்டுபிடிக்கிறார்.

மறுபுறம் மும்பையின் டானான கவுதம் மேனனை கையில் கத்தியுடன் ஒருவர் கொலை செய்ய முயற்சிக்கிறார். கொலை செய்ய வரும் அந்த நபரிடம் இருந்து கவுதம் மேனனை, மைக்கேல் காப்பாற்றுகிறார்.

இதனால் கவுதமுடன் நெருக்கமாகும் மைக்கேல், அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரியா ஒன்றையும் பார்த்துக்கொள்கிறார்.

தன்னை கொலை செய்ய திட்டமிட்டது யார் என்பதை கண்டுபிடித்து அவர்களை தீர்த்துக் கட்ட கவுதம் முடிவெடுக்கிறார். அதன்படி ஒரு தகவல் கிடைக்க, கொலை செய்ய திட்டமிட்ட நபரின் மகளை கண்டுபிடிக்கிறார்.

அந்த நபரையும் அவரின் மகளையும் கொலை செய்வதற்காக மைக்கேலை கவுதம் அனுப்பி வைக்கிறார். சென்ற இடத்தில் அந்த பெண்ணுடன் காதல் மலர, இருவரும் நெருக்கமாகிறார்கள்.

மைக்கேல் திரைவிமர்சனம்

அந்த பெண்ணையும், அவரின் தந்தையையும் மைக்கேல் கொள்ளாமல் விட்டுவிடுகிறார். இதனால் கோபமடையும் கவுதம், மைக்கேலையும் தீர்த்துக் கட்ட முடிவெடுக்கிறார்.

இறுதியில் இவர்களிடம் இருந்து மைக்கேல் தப்பித்தாரா? இருவருக்கும் என்ன ஆனது? காதலில் வெற்றி பெற்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

மைக்கேலாக வரும் சந்தீப் கிஷன் படத்திற்காக முழு உழைப்பை கொடுத்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் இவரின் உழைப்பு பாராட்டும்படி உள்ளது. கதாநாயகியாக வரும் திவ்யன்ஷா கௌசிக், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெறுகிறார்

வில்லனாக கவுதம் மேனன் தனி கவனம் பெறுகிறார். சிறப்பு தோற்றத்தில் வரும் விஜய் சேதுபதி கதைக்கு பலமாக அமைந்துள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்துள்ளார்.

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி தமிழ் சினிமாவில் தோன்றிய பழைய பாணி கதையை எடுத்துக் கொண்டு திரைக்கதையை மாற்றி அமைத்துள்ளார்.

திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாததால் பார்வையாளர்களுக்கு அலுப்பு ஏற்படுகிறது. இறுதியில் வந்த எதிர்பார்க்காத திருப்பம் விறுவிறுப்பு.

90 காலக்கட்டத்தை ஒளிப்பதிவின் மூலம் கண்முன் நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் கிரண் கெளசிக்.

சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் இல்லை.

மொத்தத்தில் மைக்கேல் – பழைய பாணி.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை