- Advertisement -

மீனாவை திருமணம் செய்து கொள்ள நான் தயார்… பிரபலம் பரபரப்பு பேட்டி..!

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முக்கிய கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார்.

அந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். அவர் தெறி படத்தில் விஜய் மகளாக நடித்திருந்தார். பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் அரவிந்த் சாமி மகளாகவும் நடித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் காலமானார். இது மீனாவை மட்டுமின்றி தமிழ் சினிமாத்துறையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மீனா

- Advertisement -

இந்த சூழலில், மீனா 2வது திருமணம் செய்துக்கொள்வாரா என்ற கேள்வியும், சர்ச்சைகளும் தொடர்ந்து எழுந்து வருகின்றன. ஆனால் 2வது திருமணம் குறித்த எந்த எண்ணமும் தனக்கு இல்லை என்று மீனா தெளிவுபட கூறியிருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில், கேரளாவை சேர்ந்த சர்ச்சைக்குரிய யூடியூப்பரான அப்துல் வர்கீஸ் என்பவர், மீனா குறித்து பேசியுள்ளார்.

- Advertisement -

அதில் அவர், மீனாவுக்கு மகள் இருப்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. மீனாவை திருமணம் செய்துக்கொள்ள நான் தயார் என்று கூறியிருக்கிறார்.

இவர் ஒரு சர்ச்சையான நபராக பார்க்கப்படுகிறார். ஏற்கெனவே நித்யா மேனன், கமல் மகள் அக்‌ஷராஹாசன் ஆகியோரை திருமணம் செய்துக்கொள்ள தயார் என்று கூறியிருக்கிறார்.

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -