Homeதமிழ் சினிமாஅப்படி சொல்லாதீங்க... ஜான்வி கபூர் வேதனை

அப்படி சொல்லாதீங்க… ஜான்வி கபூர் வேதனை

Janhvi Kapoor: நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் 2018 ஆம் ஆண்டு இஷான் கட்டருக்கு ஜோடியாக தடாக் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

இவரது நடிப்பில் கடந்த ஆண்டு மைலி மற்றும் குட் லக் ஜெர்ரி போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அவரின் அப்பா போனி கபூர் பாலிவுட்டில் ஒரு பெரிய தயாரிப்பாளர். உறவினர்கள் அனைவரும் சினிமா துறையில் இருக்கிறார்கள். பிறக்கும்போதே நட்சத்திரத்தின் குடும்பம் என்பதால் அவர் மீது நிறைய விமர்சனங்கள் இருந்தன.

சமீபகாலமாக பாலிவுட்டில் நெப்போடிசம் ரேஞ்சில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இதனிடையே அவர் தன்னை அவதூறாகப் பேசும் நபர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

அவர் கூறுகையில், “நீங்கள் என்ன செய்தாலும், சிலர் உங்களிடம் உள்ள குறைகளை மட்டுமே கண்டுபிடிப்பார்கள். ஏனென்றால் அது அவர்களுக்கு முக்கியமானதாக உணர வைக்கிறது. இதன் விளைவாக நீங்கள் எப்போதும் தலைப்புச் செய்திகளில் இருப்பீர்கள்.

எனது பலம் மற்றும் பலவீனங்கள் எனக்குத் தெரியும். நான் எப்போது ஒரு நல்ல வேலையைச் செய்கிறேன் என்பதை அறிவது எனது நோக்கம். எனது கடைசி இரண்டு படங்களின் மூலம், ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா என்று நான் சோதித்தேன்.

உனக்கு நடிக்கத் தெரியாவிட்டால், ஏன் முயற்சி செய்கிறீர்கள்? என பலரும் கேள்வி கேட்கிறார்கள். அது என்னை போன்று முயற்சி செய்யும் அனைவருக்கும் மிகவும் வலிக்கிறது. யாராவது என் வேலையைப் பாராட்டி ஆக்கப்பூர்வமான கருத்தைத் தெரிவிக்கும் போது நான் அவர்களை மதிக்கிறேன்.” என்றார்.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை