- Advertisement -

‘வெந்து தணிந்தது காடு: பார்ட் 2 குறித்து மாஸ் தகவல்

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கிய ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகியது.

முதல் நாளில் பத்து கோடிக்கு மேல் வசூல் செய்த இந்தப் படம் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களிலும் நல்ல வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸில் இரண்டாம் பாகத்துக்கு இயக்குனர் கௌதம் மேனன் லீட் கொடுத்துள்ள நிலையில் இரண்டாம் பாகம் உருவாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் சக்சஸ் மீட்டில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து மாஸ் தகவலை தெரிவித்தார்.

- Advertisement -

’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் தொடங்கி விட்டதாகவும், ஜெயமோகன் மற்றும் கவுதம் மேனன் ஆகிய இருவரும் தற்போது இரண்டாம் பாகத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளில் இருப்பதாகவும் ஸ்கிரிப்ட் பணி முடிவடைந்தவுடன் வேல்ஸ் பிலிம்ஸ் உடனடியாக இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

- Advertisement -
Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -