அஜித் நடித்த ’பூவெல்லாம் உன் வாசம்’ என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை சோனா. அதன் பிறகு ’ஷாஜகான்’ ’வில்லன்’ ’குசேலன்’ உள்பட பல படங்களில் நடித்தார்.
குறிப்பாக ’குசேலன்’ திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து கவர்ச்சியில் கலக்கி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி அவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ’கனிமொழி’ என்ற திரைப்படத்தை தயாரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ‘சில்லுனு ஒரு காதல்’ ’ரோஜா’ உள்பட ஒரு சில தொலைக்காட்சி தொடரில் அவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை சோனா, தனது சொந்த வாழ்க்கையை வெப் தொடராக தயாரித்து இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வெப் தொடருக்கு ’ஸ்மோக்கிங்’ என்ற டைட்டில் வைத்திருப்பதாகவும் அவரது கேரக்டரில் நடிக்கும் நடிகையை தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த சொந்த வாழ்க்கை வெப் தொடரில் ’கனிமொழி’ படத்தின் தயாரிப்பின் போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை கூற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.