ஒரு வாரத்திற்கு முன்பே மயில்சாமியை எச்சரித்த இயக்குனர்…!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நடிகர் மயில்சாமி தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்கள் மனதில் இடம்பெற்றவர். இவர் அண்மையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மயில்சாமி மறைந்து சில வாரங்களாகியும் அவரை பற்றிய பேச்சுக்கள் இன்று வரை ஓய்ந்தபாடில்லை .

அந்த வகையில் தற்போது இயக்குனர் பி வாசு, நடிகர் மயில்சாமி பற்றி பேசியபோது மயில்சாமி தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் அடிக்கடி வீட்டிற்கு வந்து சந்தித்து விட்டுப் போவார் என்றும் சொல்லி இருக்கிறார்.

மேலும் அவர் எப்பொழுது ஃபோன் பண்ணினாலும் நான் எடுத்துப் பேசுவேன் என்றும் சொன்னார். கடைசியாக மயில்சாமி இயக்குனர் வாசு வீட்டிற்கு வந்து இருந்தபோது, வாசு, மயில்சாமியிடம் உடம்பை கவனமாக பார்த்துக் கொள், விளையாட்டுதனமாக இருக்காதே, எனக்கு பயமாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.

அதற்கு மயில்சாமி அதெல்லாம் ஒன்றும் ஆகாது சார் என்று சிரித்தபடி பதில் சொன்னாராம். அப்படி பேசிய மயில்சாமி தற்போது இல்லை என மிகுந்த வருத்தத்துடன் வாசு சொல்லி இருக்கிறார்.

இயக்குனர் பி வாசு மட்டும் இல்லை மயில்சாமியின் மறைவிற்குப் பின்னர் பேசிய பல பிரபலங்களும் சொல்லிய ஒரே வார்த்தை மயில்சாமியை ஆரோக்கியத்தின் மேல் கவனம் செலுத்து என்று சொல்லியதைத்தான் சொன்னார்கள்.

மறைந்த நடிகர் மயில்சாமியை பொறுத்த வரைக்கும் சினிமாவில் ரொம்ப கஷ்டப்பட்ட நிறைய பேருக்கு பல உதவிகளை செய்து இருக்கிறார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here