அசோக் செல்வனை காதல் வலையில் சிக்க வைத்த இயக்குனர்.. மனைவியாகும் பாண்டியனின் வாரிசு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

Actor Ashok Selvan: கடந்த இரண்டு தினங்களாக இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் அசோக் செல்வனின் திருமணச் செய்தி தான்.

சினிமாவை பொறுத்தவரையில் தன்னுடன் நடித்த சக நடிகைகளை திருமணம் செய்து கொள்வது வழக்கமாகத்தான் இருந்து வருகிறது.

ஜெமினிகணேசன் காலத்திலிருந்து இது வழக்கத்தில் தான் இருக்கிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக சினிமா பிரபலங்களின் திருமணச் செய்தி அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து வருகிறது.

அந்த வகையில் இளம் ஹீரோவான அசோக் செல்வன் சமீபத்தில் வெளியான போர் தொழில் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறார்.

இந்தப் படத்திற்கு முன்பாக வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மன்மதலீலை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் போர் தொழில் படம் மாபெரும் வெற்றியை கொடுத்தது.

இந்நிலையில் அருண் பாண்டியனின் மூன்றாவது வாரிசான கீர்த்தி பாண்டியனை செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

இந்த திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணமாகத்தான் நடைபெற இருக்கிறது. அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் காதலுக்கு காரணமாக இருந்தது பிரபல இயக்குனர் தான்.

அதாவது இவர்கள் இருவரும் இணைந்து ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அசோக் செல்வனை காதல் வலை

இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் நீளம் ப்ரொடக்ஷன் மூலம் தான் தயாரித்து வருகிறார். ஆகையால் இந்த படத்தின் கதாபாத்திரங்களை தேர்வு செய்யும்போது அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இதற்கு சரியாக பொருந்துவார்கள் என்று பா ரஞ்சித் கூறி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியனை காதலித்து உள்ளார். இந்த காதல் விரைவில் திருமணத்தில் இணைய உள்ளது.

மேலும் செப்டம்பர் 17ஆம் தேதி பிரம்மாண்டமாக அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் நடக்க இருக்கிறதாம். இதில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here