- Advertisement -

அதிக கோபம்.. கவலை கிடையாது.. நயன்தாராவின் குணம் இதுதான்.. வெளிப்படுத்திய தனுஷ்..!

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

தனுஷ் – நயன்தாரா

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் தான் நயன்தாரா. கேரளாவில் பிறந்த நயன்தாரா டிவி தொகுப்பாளினியாக தன் பயணத்தை துவங்கினார்.

அதன் பிறகு ஐயா என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகியாக என்ட்ரி கொடுத்த நயன்தாராவிற்கு தன் இரண்டாவது படத்திலேயே சூப்பர்ஸ்டாருடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு வந்தது.

- Advertisement -

சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். ஆனால் சில பல சர்ச்சைகளால் நயன்தாராவின் திரைப்பயணம் பாதிக்கப்பட்டது.

தனுஷ் - நயன்தாரா

- Advertisement -

இதன் காரணமாக நடிப்பில் இருந்து சில காலம் விலகி இருந்த நயன்தாரா ராஜா ராணி படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு நயன்தாரா தொடர்ந்து வெற்றிப்பாதையிலேயே பயணித்து வருகின்றார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நயன்தாராவிற்கு தற்போது இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் பழைய பேட்டி ஒன்றில் தனுஷ் நயன்தாராவை பற்றி பேசியது தற்போது வைரலாகி வருகின்றது. அந்த பேட்டியில் தனுஷ் பேசியதாவது, நயன்தாராவிற்கு ரொம்ப கோபம் வரும், ஆனால் தங்கமான மனசு.

தனக்கு பிடிச்சவங்களுக்காக என்ன வேண்டுமானாலும் உதவி செய்வாங்க. பணம் பற்றி கவலைப்பட மாட்டாங்க. ரொம்ப கடுமையா உழைப்பாங்க என்றார் தனுஷ்.

இந்த பேட்டி 2008 ஆம் ஆண்டு யாரடி நீ மோஹினி படம் வெளியான சமயத்தில் எடுக்கப்பட்டது. யாரடி நீ மோஹினி படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்த தனுஷ் அதன் பிறகு எதிர் நீச்சல் படத்தில் நயன்தாராவுடன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார்.

மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியான நானும் ரவுடி தான் திரைப்படத்தையும் தனுஷ் தான் தயாரித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் நயன்தாராவை பற்றி பேசிய இவ்விஷயங்களை இணையத்தில் மீண்டும் ட்ரெண்டாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -