சின்ன கவுண்டரை சந்தித்த யோகி பாபு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

யோகி பாபு

2009ம் ஆண்டு ‘யோகி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் பாபு. அந்தப் படத்தின் தலைப்பே அவருடைய பெயரின் அடைமொழியாக வைத்துக்கொண்டார் யோகி பாபு.

பையா, கலகலப்பு, அட்டகத்தி, பட்டத்து யானை, சென்னை எக்ஸ்பிரஸ், சூது கவ்வும், வீரம், மான் கராத்தே, அரண்மனை, யாமிருக்க பயமே போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கியவர் யோகி பாபு.

தர்மபிரபு, மண்டேலா, கூர்கா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

யோகி பாபு

மெர்சல், சர்கார், பிகில், பீஸ்ட் என வரிசையாக விஜய்யுடன் நடித்து வரும் யோகிபாபு, தளபதியின் அடுத்து வரவிருக்கும் படமான வாரிசு படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய்காந்தை சந்தித்து ஆசி பெற்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும், அந்த வீடியோவில், ‘சின்னக்கவுண்டர்’ படத்தில் வரும் வானத்தை போல மனம் படைத்த மன்னவனே என்கிற பாடல் ஒலிக்கிறது.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாததால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here