தமிழ் நடிகை தற்கொலை: காதல் தோல்வியா?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நடிகர் நாசர் உள்பட பலர் நடித்த ’வாய்தா’ என்ற திரைப்படம் கடந்த மே மாதம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை மஹிவர்மன் என்பவர் இயக்கி இருந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக பவுலின் ஜெஸிகா என்பவர் நடித்து இருந்தார்.

இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் பவுலின் ஜெஸிகா திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

நடிகை ஜெஸிகா தனது விருகம்பாக்கம் வீட்டில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்த காவல்துறையினர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் அவர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

29 வயதாகும் தீபா, மிஷ்கின் இயக்கிய ‘துப்பறிவாளன்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்து இருந்த நிலையில் ‘வாய்தா’ என்ற படத்தில்தான் நாயகியாக நடித்தார்.

சமீபத்தில் பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியில் இருந்தே இன்னும் திரையுலகினர் மீளவில்லை.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு இளம் நடிகை தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here