Connect with us

பிரபலங்கள்

‘மார்பகங்கள கிண்டல் பண்றாங்க.. சாபம் விட்டாங்க..’ – சோக பக்கத்தை பகிர்ந்த நீலிமா!

பிரபல சீரியல் மற்றும் வெள்ளத்திரை நடிகையான நீலிமா யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அதில் தன்னுடைய கணவன் மற்றும் தோல்விகள் குறித்து பேசி இருக்கிறார்.

இதோ அவரது பேட்டி:

“ எனக்கு கல்யாணம் ஆகி 15 வருடங்கள் ஆகின்றன. எனது கல்யாணத்திற்கு பின்னர்தான் ‘நான் மகான் அல்ல’ படத்தில் நடித்தேன். இப்போதே நீங்கள் கணித்து விட முடியும் எனது கணவர் நான் இப்போது இருக்கக்கூடிய வளர்ச்சிக்கு எத்தகைய உத்வேகத்தையும் தந்திருப்பார் என்று.

2008 இல் இருந்து 2023 வரையிலான என்னுடைய எல்லா வேலைகளும் என்னுடைய திருமணத்திற்கு பின்னர் நடந்தது. நான் நான் மகான் அல்ல படத்தில் நடித்த கேரக்டரும் அந்தப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஆனால் அந்தப் படத்திற்கு பிறகு வாய்ப்புகள் ஏதும் பெரிதாக எனக்கு கிடைக்கவில்லை நமக்கு என்ன தலையில் எழுதி இருக்கிறதோ அதுதான் நடக்கும்.

வெளியே செல்லும் பொழுது என்னை பார்க்கும் அத்தனை நபர்களும் என் அருகில் வந்து பேச வேண்டும் என்று நினைப்பார்கள், பேசுவார்கள் பாராட்டுவார்கள்; ஆனால் அதே நேரத்தில் சிலர் என்னை திட்டியும் இருக்கிறார்கள்.

‘மார்பகங்கள கிண்டல் பண்றாங்க.. சாபம் விட்டாங்க..’ - சோக பக்கத்தை பகிர்ந்த நீலிமா!

குறிப்பாக ஒரு பாட்டி விமான நிலையத்தில் வைத்து என்னை அந்தத் திட்டு திட்டினார் நாசமாக போய்விடுவாய் என்று சபித்தார்.

நானும் எனது கணவரும் 2011ல் சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க முடிவெடுத்தோம். அது நாங்கள் நினைத்தபடி போகவில்லை. அது எங்களை எங்கு கொண்டு சென்று நிறுத்தியது என்றால், நாங்கள் வாடகை வீட்டில் கூட இருக்க முடியாத நிலைக்கு அது எங்களை தள்ளி விட்டது.

தாலி செயின் மட்டும் தான் என்னிடம் இருந்தது. இருப்பினும் நாங்கள் தொடர்ந்து முயற்சித்து 2017ல் ஒரு சீரியல் ஒன்றை தயாரித்தோம். 1100 எபிசோடுகள் சென்றது . திரும்பவும் எங்கள் முதுகில் மிகப்பெரிய அளவில் ஒரு குத்து விழுந்தது.

என்னை தவறாக விமர்சிப்பவர்கள் பற்றி எல்லாம் நான் என்றுமே கவலைப்பட்டதே கிடையாது; அவர்கள் எல்லாம் மனநல மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவர்கள். எனது இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு தான் நான் இப்படி எடை போட்டு விட்டேன். அதன் சுற்றி நிறைய காரணங்கள் இருக்கின்றன.

சில பேர் என்னுடைய மார்பகங்களை பற்றி எல்லாம் கமெண்ட் செய்கிறார்கள். அவர்களுக்கு உடனே நான் எனது குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்; அதனால் தான் அப்படி இருக்கிறது இன்று சொல்ல வேண்டும் என்று தோன்றும். இங்கு சொல்லி என்ன ஆகப்போகிறது என்று நான் அதை கடந்து விடுவேன்.” என்று பேசினார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Continue Reading
You may also like...
NEWS21
Cineavai இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Cineavai Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top