அஜித்துக்கே டஃப் கொடுக்கும் விஜய்யின் தந்தை!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகர்

இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகர் இமயமலைக்கு பைக் ரைட் சென்றுள்ளார்.

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திர சேகர். சமீபகாலமாக தனது மகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் பேசாமல் இருந்து வருகிறார்.

1981ம் ஆண்டு சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தில் இயக்குநராக அறிமுகமானார் எஸ்.ஏ.சந்திரசேகர். பெரும்பாலும் இவர் இயக்கும் படத்தில் சமூக கருத்துக்கள் மேலோங்கி இருக்கும்.

இவர், இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களில் விஜய்காந்தே நடித்திருப்பார். இதனால், அந்த காலகட்டத்தில் இவர்கள் இருவரின் காம்பினேஷன் படம் பட்டையை கிளப்பும்.

இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக விளங்கிக் கொண்டிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் கடைசியாக ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி என்ற படத்தை இயக்கினார்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகர்

இதையடுத்து, சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்து உள்ள நான் கடவுள் இல்லை என்ற படத்தை தற்போது இயக்கியுள்ளார். இந்த படத்தில் இனியா மற்றும் சாக்ஷி அகர்வால் என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இமயமலைக்கு சென்றுள்ள அவர் ராயல் என்பீல்டு பைக் முன் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படம் பல லைக்குகளை குவித்து வரும் நிலையில், எஸ்.ஏ.சி போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், அஜித்துக்கே டஃப் கொடுப்பார் போலயே என கூறிவருகின்றனர்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here