திருமணமான 4 மாதத்தில் இரட்டை குழந்தைகளா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

திடீரென இயக்குனர் விக்னேஷ் சிவன் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து உள்ளதாகவும் நாங்கள் அம்மா அப்பா ஆகி விட்டோம் என்றும் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் நடந்தது.

இந்த நிலையில் திருமணமாகி சரியாக 122 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் திடீரென நயன்தாரா மற்றும் 2 குழந்தைகளின் கால்கள் மட்டும் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளார்.

நயன் மற்றும் நான் ஆகிய இருவரும் தற்போது அம்மா அப்பா ஆகிவிட்டோம் என்று எங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து உள்ளது என்றும் எங்களின் முன்னோர்களே ஆசீர்வதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் வடிவில் வந்துள்ளார்கள் என்றும் உங்கள் அனைவரின் ஆசிகள் எங்களுக்கு வேண்டும் என்றும் பதிவு செய்துள்ளார்

இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். திருமணமாகி நான்கு மாதங்களில் எப்படி குழந்தை பிறந்தது? அதுவும் இரட்டை குழந்தைகள் பிறந்தது? என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here