Homeதமிழ் சினிமாபிரபலங்கள்இந்த ஹிட் படங்கள் எல்லாம் நயன்தாரா நடிக்க வேண்டிய படங்களா? ஷாக் ஆகாதீங்க!

இந்த ஹிட் படங்கள் எல்லாம் நயன்தாரா நடிக்க வேண்டிய படங்களா? ஷாக் ஆகாதீங்க!

40 வயதை நெருங்கிய நிலையிலும், நடிகை நயன்தாரா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நயன்தாரா அவரை தேடிவந்த சில ஹிட் படங்களில் நடிக்க மறுத்த சம்பவம் குறித்து பார்க்கலாம்.

 

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படமான பையாவில் நயன்தாரா நடிக்க மறுத்து விட்டாராம்.

நயன்தாரா

பையா படத்தில் நடிக்க முதலில் நயன்தாராவை தான் அணுகியுள்ளனர். ஆனால் அவர் கேட்ட சம்பளத்தை தரவில்லை என்பதற்காக நடிக்க மறுத்து விட்டாராம்.

அதேபோல் உதயநிதி ஹீரோவாக அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹன்சிகாவிற்கு முன்பு நயன்தாராவை தான் நடிக்க கேட்டுள்ளனர். அப்போது அவர் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

நயன்தாரா

பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பிரியாமணி ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருப்பார். அதில் முதலில் நயன்தாராவை தான் கேட்டுள்ளார்கள். ஆனால் அவர் ஐட்டம் பாடலுக்கு ஆட மறுத்து விட்டாராம்.அதேபோல தி லெஜண்ட் படத்தில் நயன்தாராவை கேட்டபோது முடியவே முடியாது என கூறி விட்டாராம்.

நயன்தாரா

அதுமட்டுமின்றி தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டான திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் கேரக்டரில் நடிக்க முதலில் நயன்தாராவை தான் கேட்டுள்ளார்கள். ஆனால் அவர் சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக நித்யா மேனன் நடித்துள்ளார்.

நயன்தாரா

இதேவேளை, சிங்கம் 2 படத்தில் அஞ்சலி ஐட்டம் பாடலுக்கு ஆடி இருப்பார். அதில் முதலில் நயன்தாராவை தான் கேட்டுள்ளார்கள் ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டாராம்.

நயன்தாரா

இப்படி நயன்தாரா ரிஜெக்ட் செய்து வெற்றிப்பெற்ற படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை