- Advertisement -

முதலில் அவ்வை சண்முகி படத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஜெமினி கணேசனை சொன்னது கூட அவர் தானாம்!

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல் ஜெமினி கணேசன், நாசர் மற்றும் மீனா போன்ற பலர் நடிப்பில் வெளியான படம் தான் அவ்வை சண்முகி. இந்த படத்தில் கமல்ஹாசன் பெண் வேடத்தில் நடித்திருப்பார்.

இந்நிலையில் இந்த படம் குறித்த சில தகவல்களை இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதன்படி இந்த படத்தில் ஜெமினி கணேசன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சிவாஜி கணேசன் தானாம்.

- Advertisement -

இதையும் படிங்க: பாகுபலி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகை தான்… வைரலாகும் தகவல்

கேஎஸ் ரவிக்குமார் சிவாஜி கணேசனை பார்த்து கதை சொல்ல அவரும் நடிக்க சம்மதம் கூறி விட்டாராம். ஆனால் சிவாஜியின் மகன் ராம்குமார் கேஎஸ் ரவிக்குமாருக்கு போன் செய்து அப்பாவிற்கு இதயத்தில் பிரச்சனை உள்ளது. எனவே சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறோம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

சிகிச்சை முடிந்து திரும்பி வர தாமதமாகும் என்பதால் அப்பாவால் நடிக்க முடியாது என்று கூறி விட்டாராம். இருப்பினும் சிவாஜிக்கு இந்த படத்தில் நடிக்க வேண்டுமென்ற ஆசை இருந்துள்ளது. ஆனால் அவரின் உடல் ஒத்துழைக்கவில்லை.

அதன் பின்னர் பார்ப்பவர்களை எல்லாம் காதலிக்கும் கேரக்டர் என்றால் கண்டிப்பாக ஜெமினி கணேசனுக்கு செட்டாகும். எனவே நீ அவனையே நடிக்க வை என்று சிவாஜி தான் ஜெமினியை பரிந்துரை செய்துள்ளார். அவர் சொன்னபடியே ஜெமினி கணேசன் அந்த கேரக்டருக்கு அப்படியே பொருந்தி இருந்தார் என கேஎஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

- Advertisement -

 

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -