Homeதமிழ் சினிமாபிரபலங்கள்நயன்தாராவிடம் மோசமாக நடந்துகொண்ட நடன இயக்குநர்

நயன்தாராவிடம் மோசமாக நடந்துகொண்ட நடன இயக்குநர்

தமிழ் சினிமாவில் முன்னணி நயன்தாரா படுகவர்ச்சியாக நடித்த திரைப்படத்தில் ஒன்று, நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான வில்லு திரைப்படம்.

இத்திரைப்படத்தை இயக்கிய பிரபுதேவா, நயன்தாராவிற்கு எந்த ஒரு கதையும் கொடுக்காமல் கவர்ச்சி கன்னியாக மட்டுமே வலம்வர செய்திருப்பார்.

2009 ஆம் ஆண்டு பொங்கலன்று ரிலீஸான வில்லு படத்தின் பிரமோஷனுக்காக நயன்தாரா, விஜய், பிரபுதேவா உள்ளிட்டோர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் போனில் பேசினர்.

அப்போது பலரும் தொடர்பு கொண்டு வில்லு படத்தை பற்றியும் விஜய், நயன்தாராவின் நடிப்பை பற்றியும் பேசினர்.

அச்சமயத்தில் நடன இயக்குனர்களான கலா மாஸ்டரும், பிருந்தா மாஸ்டரும் தொடர்புகொண்டு விஜயையும், வில்லு திரைப்படத்தையும், நயன்தாராவையும் புகழ்ந்து தள்ளினர்.

இதில் முக்கியமாக பிருந்தா மாஸ்டர் பேசியபோது, நயன்தாரா ஏன் இவ்வளவு சைலண்டாக இருக்கிறாய் எனக் கேட்கிறார்.

உடனே நயன்தாரா , நான் எப்போதும் இப்படி தான் தெரியாதா உங்களுக்கு என பதில் கூறுகிறார். உடனே அதற்கு பதிலளித்த பிருந்தா மாஸ்டர், நயன்தாரா உன்னுடைய நிஜ முகத்தை காட்டு என கலாய்த்து தள்ளினார்.

உடனே நயன்தாரா என் மானத்தை வாங்காதீர்கள் என சொல்ல, மானமா அப்படினா என பிருந்தா மாஸ்டர் நயன்தாராவை அவமானபடுத்தும் வகையில் பேசினார் .

அந்த லைவ் இன்டெர்வியூ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை