Connect with us

தவறான வயதில் கிடைத்த புகழ்… ஓவர் சீன் போடும் அனிகா… விமர்சிக்கும் ரசிகர்கள்

பிரபலங்கள்

தவறான வயதில் கிடைத்த புகழ்… ஓவர் சீன் போடும் அனிகா… விமர்சிக்கும் ரசிகர்கள்

அனிகா சுரேந்தர்

தமிழ் சினிமாவில் பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் பிரபலமடைந்து உள்ளனர்.

அந்த வகையில் என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் அஜித்குமாருக்கு மகளாக நடித்து அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்

மேலும், மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். விஸ்வாசம் படத்தில் அஜித் – நயன்தாராவின் மகளாக நடித்த அனிகா தற்போது நயன் போலவே மாறி வருகிறார். பலரும் இவரை குட்டி நயன்தாரா என்று செல்லமாக அழைத்து வருகின்றனர்.

புட்ட பொம்மா

அனிகா தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் முதன் முதலாக கதாநாயகியாக நடித்துள்ள படம் புட்ட பொம்மா. இப்படம் மலையாளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டுவெளியான கப்பேலா என்ற படத்தின் ரீமேக்காகும்.

புட்ட பொம்மா படம் கடந்த 4ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அனிகா சுரேந்தர்

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மலையாளத்தில் உருவாகி இருந்த ஓ மை டார்லிங் என்ற படத்தில் அனிக்கா நடித்து இருந்தார். அத்துடன், இந்த படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்து இருந்தார் அனிகா.

இதனை பார்த்த ரசிகர்கள், ட்ரைலரிலேயே இப்படி என்றால் படத்தில் எப்படியோ என விமர்சித்து வந்தனர்.

இதுகுறித்து அனிகா கூறுகையில் `நான் நடித்துள்ள “ஓ மை டார்லிங்” படத்தில் வரும் முத்தக்காட்சியை தவிர்க்க முடியாது. என்னிடம் கதை சொல்லும் போதே அதில் வரும் முத்த கட்சியின் முக்கியத்துவத்தை என்னிடம் கூறினார் இயக்குனர்.

கதைக்கு அந்த காட்சி தேவை பட்டதால் நான் நடித்தேன். அந்த காட்சியில் ஆபாசம் என்பதர்க்கு இடம் கிடையாது, அது படம் வெளியான உடன் உங்களுக்கே தெரியும்”என்று கூறினார்.

இப்படியான நிலையில் இவர் கல்லூரி விழா ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக சென்று இருக்கிறார். அங்கு மேடையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்த அனிகா, தன்னை பேச அழைத்ததும் ஓவராக ரியாக்ஷன் கொடுத்தார்.

பின்னர் பேச வந்ததும் மேஜை மீது ஸ்டைளாக கையை ஊன்றியபடி நின்று பேசினார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலரும் அனிகாவின் நடத்தையை விமர்சித்து வருகின்றனர்.

அதிலும் சிலர், 17 வயதில் இவ்ளோ சீன் என்றும் தவறான வயதில் கிடைத்த பிரபலத்தின் விளைவு என்றும் கூறி வருகின்றனர்.

கொஞ்சம் ஓவராத்தான் போறாரோ அனிகா?

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Continue Reading

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள செய்தி WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து கூகுள் செய்திகள் பக்கத்தில் Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in பிரபலங்கள்

திரைவிமர்சனம்

பிரபலமானவை

To Top