Homeதமிழ் சினிமாபிரபலங்கள்மனமுடைந்து பேசிய நடிகை ராஷ்மிகா…

மனமுடைந்து பேசிய நடிகை ராஷ்மிகா…

தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறக்கும் முன்னணி நடிகையாக வலம் வருவர் நடிகை ராஷ்மிகா. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் கதாநாயகியாக நடித்துள்ள படம் வாரிசு .

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் திரையரங்கங்களில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சக்கபோடு போட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் மிகவும் மனமுடைந்து பேசியுள்ளார் :
சில நேரங்களில் என் உடல் தோற்றத்தை வைத்து மக்களின் மோசமான விமர்சனங்களுக்கு ஆளாகிறேன். நான் ஒர்கவுட் செய்யாமல் குண்டாக இருந்தாலும் தவறு, ஒர்கவுட் செய்து ஒல்லியாக ஆனாலும் தவறு. நான் ஓவராக பேசினாலும் கிரிஞ் என்று கூறுகிறார்கள். பேசவில்லை என்றால் இந்த பொண்ணுக்கு அதிக திமிரு இருக்கிறது என்று கூறுகிறார்கள். உங்களுடைய வார்த்தைகள் என்னை மனரீதியாக மிகவும் துன்புறுத்துகிறது ‘ என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

எப்போதும் துடிப்புடன் இருக்கும் ரஷ்மிக்கா பேட்டி ஒன்றில் இப்படி மனமுடைந்து பேசியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை