- Advertisement -

நக்மா தவிர ஜோதிகாவின் இன்னொரு அக்காவை தெரியுமா? அவரும் நடிகையாமோ!

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

திருமணத்திற்கு பின்னர் தற்போது மீண்டும் அவரது நடிப்பை ஜோதிகா தொடர்ந்து வருகிறார். இவரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது இவரின் சகோதரி நக்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிகாவிற்கு முன்பே தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருந்த நக்மா தனது தங்கைக்காக பலரிடம் வாய்ப்பு கேட்டு அவரை அறிமுகம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஜோதிகாவின்  இன்னொரு அக்காவை

பலரும் ஜோதிகா மற்றும் நக்மா இருவர் மட்டும் தான் சகோதரிகள் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு இடையில் ரோஷினி என்று ஒரு சகோதரி உள்ளார். உண்மையில் நக்மா, ரோஷினி மற்றும் ஜோதிகா ஆகிய மூவருக்கும் அம்மா ஒருவர் அப்பா இரண்டு பேர் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஜோதிகாவின்  இன்னொரு அக்காவை

இதில் ஜோதிகாவும் ரோஷினியும் உடன்பிறந்த சகோதரிகளாம். நக்மா இன்னொரு அப்பாவுக்கு பிறந்த சகோதரியாம். ஜோதிகாவிற்கு முன்பே நக்மா முதலில் ரோஷினியை தான் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.

- Advertisement -

அதன்படி ரோஷினி ஹீரோயினாக நடித்த சிஷ்யா மற்றும் துள்ளித்திரிந்த காலம் போன்ற படங்கள் பிளாப் ஆகின. அதேபோல அவர் தெலுங்கில் நடித்த படங்களும் பிளாப் ஆனதால் சினிமாவே வேண்டாமென அவர் ஒதுங்கி விட்டாராம். ரோஷினி பார்ப்பதற்கு கொஞ்சம் ஜோதிகா சாயலில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -