Homeதமிழ் சினிமாஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் செம்ம விருந்து.. முழு விவரம் இதோ!

ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் செம்ம விருந்து.. முழு விவரம் இதோ!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது.

அந்த வகையில் பிப்ரவரி 9ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த பொங்கல் விருந்தாக வெளியான சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ மற்றும் தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ ஆகிய திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன.

இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்

’அயலான்’ திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில், ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

அதேபோல் ’இப்படிக்கு காதல்’ என்ற தமிழ் திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்

மேலும் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவான ’குண்டூர் காரம்’ என்ற படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. ஆஹா ஓடிடியில் ’பபுள்கம்’ என்ற தெலுங்கு படம் வெளியாகிறது.

இந்த வாரம் ’அயலான்’, ’கேப்டன் மில்லர்’ உள்பட 3 தமிழ் படங்கள் வெளியாக இருப்பதை அடுத்து, ஓடிடி ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கிறது.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை