Homeதமிழ் சினிமாஹீரோ ஆதிக்கத்தை உடைத்த 'அவள் ஒரு தொடர்கதை'

ஹீரோ ஆதிக்கத்தை உடைத்த ‘அவள் ஒரு தொடர்கதை’

அவள் ஒரு தொடர்கதை – Aval Oru Thodar Kathai

இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் பெண்ணின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துமான படங்களையும் கொடுத்துள்ளார்.

அந்த வகையில் 1974 இல் வெளியாகி 150 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்ற படம் அவள் ஒரு தொடர்கதை.

இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு, பெங்காலி, இந்தி, கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் இப்படம் மீண்டும் எடுக்கப்பட்டது.

நம் மனதில் அழிக்க முடியாத தாக்கத்தை உண்டாக்கிய அவள் ஒரு தொடர்கதையில் கவிதா கதாபாத்திரத்திற்கு மிகவும் சரியாக பொருந்தி இருந்தார் சுஜாதா.

இப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்திருந்தார். இவர்களைத் தவிர ஸ்ரீப்ரியா, பட்டாபட்டி ஜெயலட்சுமி, விஜயகுமார், ஜெய்கணேஷ் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.

எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாலச்சந்தரின் பல அற்புதமான படங்களில் அவள் ஒரு தொடர்கதை படமும் ஒரு முத்தாக அமைந்தது.

 

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை