Homeதமிழ் சினிமா'தெறி' இந்தி ரீமேக் ’பேபி ஜான்’... அட்லி வெளியிட்ட அறிவிப்பு.. ரிலீஸ் தேதி தெரியுமா?

‘தெறி’ இந்தி ரீமேக் ’பேபி ஜான்’… அட்லி வெளியிட்ட அறிவிப்பு.. ரிலீஸ் தேதி தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவான ’தெறி’ திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் 8 ஆண்டுகள் கழித்து தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் சமீபத்தில் பூஜை மும்பையில் நடந்த போது இந்த படத்தை தயாரிக்கும் அட்லி, ப்ரியா அட்லி ஆகிய இருவரும் பூஜையில் கலந்து கொண்டனர்.

 

’தெறி’ ரீமேக் படத்தில் விஜய் கேரக்டரில் வருண் தவான், சமந்தா கேரக்டரில் கீர்த்தி சுரேஷ், எமி ஜாக்சன் கேரக்டரில் வாமிகா கபி, மகேந்திரன் கேரக்டரில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அட்லி தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் டைட்டில் ’பேபி ஜான்’ என்று அறிவித்துள்ளதோடு டைட்டில் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் வரும் மே 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை