Connect with us

தமிழ் சினிமா

ஒரே படத்தால் மலர்ந்த காதல்…ரம்யா பாண்டியனின் தங்கையை கரம்பிடிக்கும் அசோக் செல்வன்

Ashok Selvan: சாக்லேட் பாயாக வலம் வந்த அசோக் செல்வன் போர் தொழில் படத்தில் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தார்.
புதிதாக வேலை பார்த்திருக்கும் போலீஸ் அதிகாரியாக தனது துறுதுறுப்பான மற்றும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் சினிமாவில் எப்படி அசோக் செல்வன் அடுத்தடுத்து வளர்ச்சி அடைந்து வருகிறாரோ இந்த சூழலில் திருமணத்தையும் விரைவில் முடிக்க இருக்கிறார்.

அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் அசோக் செல்வனுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. பிரபல நடிகை ரம்யா பாண்டியனின் சகோதரியை தான் அசோக் செல்வன் மனக்க இருக்கிறார்.

போட்டோ சூட் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன் சில சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

அதோடு மட்டுமல்லாமல் வெள்ளிதிரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். அருண் பாண்டியனின் சகோதரர் பெண் தான் ரம்யா பாண்டியன்.

இந்நிலையில் இவரின் தங்கையும் அருண் பாண்டியனின் மூன்றாவது மகளும் ஆன நடிகை கீர்த்தி பாண்டியனை தான் அசோக் செல்வன் மணக்கயிருக்கிறார்.

இவர்கள் இருவருக்கும் எப்படி காதல் மலர்ந்தது என்பது பலருக்கும் புதிராக இருக்கும். அதாவது அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜும் நடித்து வருகிறார்.

ப்ளூ ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருவரும் நெருங்கி பழகி வர நாளடைவில் இது காதலாக மாறி உள்ளது.

இப்போது இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார்கள். மேலும் விரைவில் இவர்களது திருமண தேதியை இருவரும் சேர்த்து அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்க்கலாம்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

NEWS21
Cineavai இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Cineavai Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top