Connect with us

தமிழ் சினிமா

நேரலையில் கண்ணீர் விட்டு கதறிய நடிகை சதா…!

நடிகை சதா 2002 ஆம் ஆண்டு ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தெலுங்கில் ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்தில் நித்தின் நடித்திருந்த நிலையில், கதாநாயகியாக சதா தான் நடித்திருந்தார். மேலும் முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதையும் பெற்றார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த சதா, திடீர் என பட தயாரிப்பிலும் களமிறங்கினார்.

தனியார் வங்கியில் கடன் வாங்கி கடந்த 2018 ஆம் ஆண்டு இவர், தயாரித்து நடித்திருந்த திரைப்படம் ‘டார்ச் லைட்’. இதில் ஒரு பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். அந்தப்படம் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல் போனது.

30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சதா, தான் சம்பாதித்த பணத்தை வைத்து மும்பையில் ஓட்டல் பிசினஸ் ஒன்றை துவங்கினார். எர்த்லிங்ஸ் கபே என்கிற பெயரில் சுமார் 4 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக இந்த ஓட்டல் இயங்கி வருகிறது. சதாவும் ஒரு நாளைக்கு சுமார் 12 மணிநேரம் இந்த கபே-வில் தான் நேரம் செலவழித்து, தன்னுடைய வியாபாரத்தை பார்த்து வந்தார்.

ஆனால் தற்போது திடீர் என, ‘எர்த்லிங்ஸ் கபே’ இயங்கி வரும் இடத்தின் உரிமையாளர். அந்த இடத்தை காலி செய்ய சொல்வதாகவும், எவ்வளவோ இந்த சூழலை மாற்ற முயற்சித்த போதும் அது முடியாமல் போய் விட்டது என கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

NEWS21
Cineavai இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Cineavai Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top