Connect with us

தமிழ் சினிமா

‘செக்க சிவந்த வானம்’ படத்தை இயக்கியது கெளதம் மேனனா?

அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் மற்றும் சிம்பு ஆகிய நான்கு முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்த திரைப்படம் ’செக்கச்சிவந்த வானம்’.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு மீடியா ஒன்று இயக்குனர் கெளதம் மேனனிடம் பேட்டி எடுத்தபோது தொகுப்பாளர், ‘விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு ஆகியோர்களை வைத்து இயக்கிய செக்க சிவந்த வானம்’ படம் குறித்த அனுபவத்தை கூறுங்கள் என்று கேட்டபோது கௌதம் மேனன் ஒரு நிமிடம் குழப்பம் அடைந்தார்.

அதன்பின் அவர் அந்த கேள்வியை எளிதாக எடுத்துக் கொண்டு அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு ஆகிய நான்கு நடிகர்களை ஒரே படத்தில் நடிக்க வைப்பது எனக்கு வேண்டுமானால் கஷ்டமான காரியமாக இருக்கலாம், ஆனால் மணிரத்னம் அவர்களுக்கு இது மிகவும் எளிதான காரியமாக அமைந்தது என்று கூறி, தொகுப்பாளருக்கு அந்த படத்தை இயக்கியது மணிரத்னம் என்பதை புரிய வைத்தார்.

அத்துடன், என்னுடைய படத்தில் சிம்பு நடிக்கும் போது காலை 7 மணிக்கு வரலாம் என்றும் ஆனால் மணிரத்னம் படத்தில் நடிக்கும்போது அதிகாலை 5 மணிக்கு வர வேண்டும் என்றும் நகைச்சுவையுடன் அவர் கூறினார்.

https://twitter.com/i/status/1572213453124960256

 

NEWS21
Cineavai இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Cineavai Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top